0 comments

கம்பு தோசை

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ கிராம்
கம்பு - 1/2 கிலோ கிராம்
உளுந்து - 1/4 கிலோ கிராம்
சிவப்பு மிளகாய் - 4
சிறியவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
வெள்ளைபூண்டு - 4 பல்
உப்பு

செய்முறை:
கம்பு அரிசி இரண்டையும் சேர்த்து ஊரவைத்து கிரைண்டரில் நைசாக அரைக்கவும். அதன்பிறகு உளுந்தை நன்குஅரைத்து, அரைத்தமாவுடன் சேர்த்து தேவையான உப்பு கரைத்து வைக்கவும். மறுநாள் காலையில் தோசை சுட்டால் மிகருசியாக இருக்கும். 

சிவப்பு மிளகாய் சிறியவெங்காயம் தக்காளி எல்லாவற்றையும் எண்ணை சேர்த்து வதக்கவும். பிறகு வெள்ளைபூண்டு சேர்த்து அரைக்கவும். கம்பு மாவு தோசைக்கு தொட்டு சாப்பிடவும்.
0 comments

வெண்டிக்காய் தோசை

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ கிராம்
வெண்டிக்காய் - 1/4 கிலோ கிராம்
உப்பு

செய்முறை:
ஒரு மணி நேரம் அரிசியை தண்ணீரில்  ஊறவைக்கவும். வெண்டிக்காயை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த வெண்டிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கிரைண்டரில் முதலில் வெண்டிக்காயை அரைக்கவும் பிறகு புழுங்கல் அரிசியை சுத்தம் செயதபின் வெண்டிக்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். முதல்நாள் மாலை  அரைத்தமாவை மறுநாள் காலை தோசையாக வார்க்கவும். 

பலன்கள்:
வெண்டிக்காய் கால்சியம், பொட்டாசியம், ஆண்டியாக்ஸிடண் உள்ளது, இது கொழுப்பு இல்லாததால் எடை இழப்பு உணவில் ஒரு பகுதியாக உண்ணப்படுகிறது. 
0 comments

புழுங்கல் அரிசி ரொட்டி அடை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ கிராம்
து.பருப்பு - 150 கிராம்
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 6
பெரிய வெங்காயம் - 4
காயம் தூள்
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
ஊ.பருப்பு

செய்முறை:

புழுங்கல் அரிசி து.பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அதற்கு பிறகு கிரைண்டரில் தண்ணீர் வடித்து அரிசி, பருப்பு, தேங்காய், மிளகாய், காயம் தூள், மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். வெங்கல பாத்திரம் இருந்தால் அதில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, ஊ.பருப்பு, நறுக்கிய வெங்காயம்,  கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து வதக்கி மாவுடன் பிசையவும். அடுப்பு பற்றவைத்து வெங்கல பத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் சிறு உருண்டை மாவு எடுத்து பாத்திரத்தின் ஓரத்தில் மற்றும் நடுவில் வடை போல் தட்டவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய் சுற்றி ஊற்றி தட்டு வைத்து மூடி அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். அடுப்பை சிறிதாக எரிய விடவும். சிறிது நேரம் பிறகு ரொட்டி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
0 comments

கசகசா அல்வா

தேவையான பொருட்கள்:

கசகசா - 50 கிராம்
பனங்கல்கண்டு - 100 கிராம்
பசும்பால் - 100 மில்லிலிட்டர்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

கசகசா பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊரவைக்கவும். பிறகு மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை வானலியில் போட்டு கிளரவும். பால் வற்றியதும் பனங்கல்கண்டு போட்டு அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளரவும். அல்வா பதம் வரும் பொழுது இறக்கி வைத்து இளம்சூட்டில் சாப்பிடவும்.

பலன்கள்:

இருமல், சளி, தொண்டை வலி, வயிற்றுப்புண் இதற்கு சிறந்த மருந்து.
 
;