புழுங்கல் அரிசி ரொட்டி அடை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ கிராம்
து.பருப்பு - 150 கிராம்
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 6
பெரிய வெங்காயம் - 4
காயம் தூள்
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
ஊ.பருப்பு

செய்முறை:

புழுங்கல் அரிசி து.பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அதற்கு பிறகு கிரைண்டரில் தண்ணீர் வடித்து அரிசி, பருப்பு, தேங்காய், மிளகாய், காயம் தூள், மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். வெங்கல பாத்திரம் இருந்தால் அதில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, ஊ.பருப்பு, நறுக்கிய வெங்காயம்,  கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து வதக்கி மாவுடன் பிசையவும். அடுப்பு பற்றவைத்து வெங்கல பத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் சிறு உருண்டை மாவு எடுத்து பாத்திரத்தின் ஓரத்தில் மற்றும் நடுவில் வடை போல் தட்டவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய் சுற்றி ஊற்றி தட்டு வைத்து மூடி அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். அடுப்பை சிறிதாக எரிய விடவும். சிறிது நேரம் பிறகு ரொட்டி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

 
;